• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பனை விவசாயிகளின் மீது சாராய வழக்கு தொடர்வதாக கூறி அப்பகுதி பனைத்தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் தர்ணா.

பனை விவசாயிகளின் மீது சாராய வழக்கு தொடர்வதாக கூறி அப்பகுதி பனைத்தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் தர்ணா.

மேஷாக்

UPDATED: May 26, 2023, 10:40:28 AM

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வேம்பி கிராமம் பூரி குடிசை பகுதியில் பனையேறும் பனை விவசாயிகளின் மீது சாராய வழக்கு தொடர்வதாக கூறி அப்பகுதி பனைத் தொழில் செய்யும் விவசாயிகளின் குடும்ப தலைவிகள் கஞ்சனூர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தங்கள் பனை மரங்களில் இருந்து பதநீர் மற்றும் நுங்கு கல்லு போன்றவற்றை அறுவடை செய்து விவசாயம் செய்து கொண்டு வருவதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் பெண்கள் என்று கூட பாராமல் மரியாதை குறைவாகவும்,

அவமானப்படுத்தும் விதமாகவும் அவர்களை தகாத வார்த்தைகளை கூறி திட்டுவதாகவும் காவல்துறையினர் மீது பனை விவசாயிகளின் குடும்ப தலைவிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும் தற்பொழுது இரண்டு நபர்கள் மீது சாராய வழக்கு போடுவதாக கூறி காவல்துறையினர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended