• முகப்பு
  • இலங்கை
  • புத்தளம் பிரதேசத்தில் பல பகுதிகளில் தெங்குச் செய்கை பாதிப்பு

புத்தளம் பிரதேசத்தில் பல பகுதிகளில் தெங்குச் செய்கை பாதிப்பு

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Mar 21, 2024, 7:20:23 AM

வெண்ணிற நோய்த் தாக்கத்தினால் புத்தளம் பிரதேசத்தில் பல பகுதிகளில் தெங்குச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read : ஜெயக்குமார் கலந்து கொண்டபொங்கல் தொகுப்பு வழங்கும் நல திட்ட உதவி நிகழ்ச்சியில் நபரின் முகத்தில் குத்து விட்ட காவல் உதவி ஆய்வாளர்.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட புத்தளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, வேப்பமடு ஆகிய பகுதிகளில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம் காணப்படுவதினால் தெங்கு செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Also Read : நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

தெங்கு உற்பத்தி மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றமையினால் தாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்குச் செய்கையாளர்கள் இதன்போது தெரிவித்தனர். 

தேங்காய் ஒன்றின் விலை சுமார் 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கின்றனர்.

Also Read : விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரியை கொன்றுவிட்டு தப்பிக்க முயன்றவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெண்ணிற நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு தெங்கு உறத்தியாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended