• முகப்பு
  • ஆன்மீகம்
  • பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல் வீடுகளில் வாழை மரங்கள், தோரணம் போன்றவற்றை கட்டி வித்தியாசமான தீமிதி திருவிழா 

பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல் வீடுகளில் வாழை மரங்கள், தோரணம் போன்றவற்றை கட்டி வித்தியாசமான தீமிதி திருவிழா 

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 23, 2023, 6:04:26 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்காக மேல உத்தம நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு விழா பத்திரிக்கையினை திருவிழாவின்போது நேரில் சென்று கொடுத்து அழைப்பது வழக்கம்.

விழாவிற்கு முன்பாக இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வீடுகளை புதுப்பித்து வெள்ளையடிப்பார்கள். விழாவிற்கு முன்பாக இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பும் கீற்று கொட்டகைகள் போட்டு வரிசையாக வாழை மரங்கள், தோரணங்கள், இளநீர், நொங்கு,பலா பழம், கட்டியிருந்தனர்.

இந்நிலையில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழாவை ஊரே விழாக்கோலம் பூண்டது.விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended