• முகப்பு
  • ஆன்மீகம்
  • சத்தியமங் கலம் அருகே உள்ள அருள்மிகு  ஸ்ரீ சேத்து மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு திருகம்பம் நடும் விழா

சத்தியமங் கலம் அருகே உள்ள அருள்மிகு  ஸ்ரீ சேத்து மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு திருகம்பம் நடும் விழா

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 18, 2023, 7:12:26 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சேத்து மாரியம்மன் திருக் கோவில் கம்பம் திருவிழா நேற்று 17 ம் தேதி புதன் கிழமை பூச்சாட்டுதலுடன். துவங்கியது.

நேற்று இரவு வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடை பெற்றது.அப்போது ஆலயத்தின் முன்பு 12அடி உயரம் கொண்ட திருக்கம்பம் நடப்பட்டது.

இரவு நேரத்தில் இளைஞர்கள் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

ஆலயத்தின் முக்கிய திருவிழா 24ம்தேதி பவானி நதிக்கரை யிலிருந்து தீர்த்தம் குடம் கொண்டு வருதல் ,25ம் தேதி அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூச்சட்டி எடுத்தல், கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

26ம் தேதி மஞ்சள் நீராடுதல் விழா, விளையாட்டு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடை பெறவுள்ளன. ஜூன்1 ம் தேதி மறுபூஜை நடைபெறவுள்ளது .

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended