கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

பதுளை - ராமு தனராஜா 

UPDATED: Mar 18, 2024, 4:04:10 PM

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read : இந்த உலக வரைபடத்தில் இஸ்ரேவேல் எனும் நாடு இல்லை

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் மேல் பிரிவில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.

இதன் போது எல்டப் மேற்பிரிவு காட்டு பகுதியில் சூட்சுமமான முறையில் இரண்டு பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 139250 மில்லி லீட்டர் கோடாவை விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read : அரச இயந்திரத்தை தவறாக வழிநடாத்த முயற்சிக்கும் செயலாகும்

அத்துடன் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பசறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பதுளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்ணவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read : ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

VIDEOS

RELATED NEWS

Recommended