• முகப்பு
  • சென்னை
  • 23 ஆண்டுகளுக்கு பிறகு பயின்ற அரசு பள்ளிக்கு சீர்வரிசைகளுடன் சென்ற முன்னாள் மாணவர்கள்.

23 ஆண்டுகளுக்கு பிறகு பயின்ற அரசு பள்ளிக்கு சீர்வரிசைகளுடன் சென்ற முன்னாள் மாணவர்கள்.

சுந்தர்

UPDATED: Feb 25, 2024, 2:08:10 PM

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், பழந்தண்டலம் பகுதியில் அரசு பள்ளி உள்ளது.

இங்கு 2000 ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் நிலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

இதையடுத்து முன்னாள் மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயின்ற பள்ளிக்கு வேண்டிய லைட், நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, டேபிள் உள்ளிட்டவற்றை திருமணத்திற்கு சீர்வரிசை எடுத்து செல்வது போல் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சீர்வரிசை போன்று பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

மேலும் பள்ளியில் பழுதடைந்த புதிய கட்டிடத்தையும் முன்னாள் மாணவர்கள் சீரமைத்து கொடுத்தனர் இந்த பள்ளியில் பயிலும் போது மாணவர்கள் அணிந்த வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட்டை பள்ளியில் பயிலும் மாணவர்கள் போன்று அணிந்து வந்தனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்.

மேலும் தங்களுக்கு பாடம் நடத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

பயிலும் போது மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி கண்டிப்புடன் அடிப்பார்களோ அதே போல் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் கையால் விரும்பி அடி வாங்கினார்கள்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

தங்களது பெற்றோர் பள்ளியில் ஆசிரியர்களிடம் எப்படி அடி வாங்கினார்கள் என்பதை அவர்களது மனைவியும், பிள்ளைகளும் ரசித்து பார்த்தனர்.

மேலும் பயின்ற மாணவர்களை பார்த்து ஆசிரியர் ஒருவர் பாடல் பாடியதும் முன்னாள் மாணவர்கள் குழந்தை போல் மாறி நடந்து கொண்டதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended