• முகப்பு
  • இலங்கை
  • அல் - ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பும்

அல் - ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பும்

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: Feb 25, 2024, 12:33:42 AM

ஏறாவூர் அல்

மட்டக்களப்பு ஏறாவூர் அல் ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் மட் /மிச்நகர் இல்மா வித்தியாலய மண்டபத்தில் ஜனாபா.றகுமா வீவி அஹமட் இர்பான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் செய்யித் அலி ஷாஹிர் மௌலானா,  மாகாண முன்னாள் ஆளுநரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விஷேட அதிதியாக ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளரும் செயலாளருமான எச்.எம்.எம். ஹமீம் மட் / மிச்நகர் இல்மா பாடசாலையின் அதிபர் எச்.எல்.முஹாஜீர் மற்றும் மின்மினி மின்ஹாவும் கலந்து சிறப்பித்தனர்.

பாலர் பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended