• முகப்பு
  • சென்னை
  • சென்னை காசிமேடு பகுதியில் ஆட்டோவில் சட்ட விரோதமாக 249 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர்.

சென்னை காசிமேடு பகுதியில் ஆட்டோவில் சட்ட விரோதமாக 249 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர்.

நெல்சன் கென்னடி

UPDATED: Sep 27, 2023, 9:41:27 AM

தமிழகத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்ச்சியாக சென்னை காசிமேடு பகுதியில் அமைந்துள்ள சிங்காரவேலன் நகர் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடம் அளிப்பது போன்று வந்து கொண்டிருந்த ஆட்டோவை வழிமறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த சிங்காரவேலன் நகரை சேர்ந்த வினோத்குமார் வயது 40 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 249 மது பாட்டில்கள் 1 செல்போன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

பின்பு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended