திருச்சி அருகே இளம்பெண்ணை தாக்கிய கல்லூரி பேராசிரியர் கைது.

JK 

UPDATED: May 20, 2023, 7:52:29 AM

திருச்சி மாவட்டம திருவறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42) இவர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கு திண்டுக்கல் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தகவல் மையம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென்று அந்த பெண் தன்னை கல்லூரி பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பேராசிரியர் ரமேஷ் ஜாமினில் வெளியே வந்து திருச்சியில் தங்கி வருகிறார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரமேஷ் அந்த இளம் பெண்ணுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து அந்த இளம் பெண் திருச்சி வந்து திருவெறும்பூரில் பேராசிரியர் ரமேஷ் சை சந்தித்து பேசி உள்ளார்.

அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரமேஷ் அந்த இளம் பெண்ணை தாக்கி உள்ளார்.

இது குறித்து அந்த இளம் பெண் திருவெறும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ரமேஷ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended