மன்னாா்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த தின விழா.

ஜெயராமன்

UPDATED: Feb 24, 2024, 9:44:23 AM

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கும் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

பேரணியாக சென்று கோபாலசமுத்திரம் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் சிலைக்களுக்கு தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார் . 

அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு காலை உணவுகளை வழங்கினார்.

Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சிவ ராஜமாணிக்கம் , நகரசெயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம், ஒன்றிய செயலாளர்கள் மேற்கு தமிழ்செல்வம் ,கிழக்கு தமிழ் கண்ணன் , உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிரணி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended