போக்குவரத்தில் பணியாற்றிய 669,  பயனாளிகளுக்கு ரூ196.47லட்சம் பணப்பலன்கள் - அமைச்சர்கள் வழங்கினர்.

JK 

UPDATED: May 29, 2023, 6:48:56 AM

திருச்சி மண்டல மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்து திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஒய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள்  வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையின் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ஆகியோர் கலந்து கொண்டு 669,  பயனாளிகளுக்கு  ரூ196.47லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள்.

நிகழ்வில் துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,  மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், அப்துல்சமது, பொதுமேலாளர் சக்திவேல் மற்றும் துறை அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள், ஒட்டுனர்கள், நடத்துனர்கள், போக்குவரத்து துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended