பதுக்கி வைத்திருந்த தலா 450 கிலோ ரேஷன் அரிசி.

ஜோ.லியோ

UPDATED: May 11, 2023, 1:28:06 PM

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, கண்டியங்காடு பஸ் ஸ்டாப் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

கிடைத்த பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ குருணை அரிசி என மொத்தம் 950 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாப்பாநாட்டை சேர்ந்த சரவணன் -52 வயது என்பவர் ரேஷன் அரிசி மற்றும் குருணையை ரேஷன் அட்டைதாரர்களிடம் விலைக்கு வாங்கி அதனை மொத்த விற்பனை செய்ய பதுக்கி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 450 கிலோ குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended