ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்டது

வவுனியா

UPDATED: Mar 24, 2024, 2:28:18 PM

ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சனை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

Also Read : வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவி

வவுனியாவில் இன்று (24.03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பல்வேறு பட்ட தடைகளை தாண்டி வந்திருக்கின்றோம். எங்களுடைய ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்ட நிலை. என்ன காரணத்திற்காக ஆயுதப் போராட்டம் தொடங்கியதோ அந்த நிலமை மோசமாக இன்றும் இருக்கிறது. இலங்கையில் இதுவரை வந்த ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பவர்களாக இதுவரை இல்லை.

Also Read : இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் "உறுயம" வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இது வரை தீர்வு எட்டப்பட்டது என்றால் அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் எமது அரசியல் சாசனத்தில் உள்ள விடயமாக உள்ளது.

13வது திருத்தத்தில் உள்ள மாகாணசபையைக் கூட தருவதற்கு தயாரில்லை. கடந்த 6, 7 வருடங்காளாக அதற்கு தேர்தலும் நடத்தப்படாத நிலை உள்ளது. மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Also Read : வட கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு

அதேநேரம், இந்தவருடம் தேர்தலைப் எதிர்நோக்கும் ஒரு வருடமாகவும் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சில கருத்துக்கள் உருவாகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருகின்றதா? இன்று பலமான பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர் கொள்ளத் தயாரா? 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கலைப்பதை ஏற்பார்களா? என்றால் அதற்கான சூழ்நிலைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே, இவ்வாறான நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை உள்ளது.

தமிழ் மக்கள் அதனை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதும் இங்கு இருக்கக் கூடிய கேள்வியாகவுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகள் கடந்த சில மாதங்களாக இவை தொடர்பான பல்வேறு பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பேசி வருகின்றன.

Also Read : ஹிமய மலைச் சிகரத்திற்கு, மலை ஏறுவதற்கு பேராதனைப் பல்கலைக்கழக குழு

 இதனை எவ்வாறு கையாளலாம். தமிழ் மக்களின் விடியலுக்காக இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்து தொடர்பில் பேசி வருகின்றோம். அனைத்து தமிழ் கட்சிகளும் முயற்சித்தால் அதனை சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பது பொதுவான கருத்து.

தமிழ் தேசிய பரப்பில் இருக்கக் கூடிய தமிழ் கட்சிகள் அவைகள் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவார்களாக இருந்தால் தமிழ் மக்களது கோரிக்கைளை குறைந்தபட்சம் வெளிக் கொண்டு வர முடியும். தற்போது இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை தான் இருப்பதாக பேசப்படுகிறது.

ஒரு தேசிய இனப்பிரச்சனை ஒன்று இருப்பதாக தற்போது யாரும் பேசுவது கிடையாது. பொருளாதார பிரச்சனை தீர்க்கப்பட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற கருத்தில் பேசுகிறார்கள். ஆனால் பொருளாதாரப் பிரச்சனைக்கு யுத்தமும், தேசிய இனப்பிரச்சனையும் தான் காரணம் என்பதை மறந்து போயுள்ளார்கள்.

Also Read : மறைந்த காமினி திசாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி

இலங்கையில் நடந்த குற்றத்திற்காக தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு ஏறத்தாழ 250 மில்லியன் அமெரிக்கா டொலர் பணத்தை இலங்கை அரசாங்கம் செலவு செய்துள்ளது எனச் சொல்லப்படுகிறது.

அவற்றின் ஊடாக அல்லது அந்த விமானங்கள், செல்கள் ஊடாக ஏற்பட்ட அழிவு என்பது இன்னும் பல மில்லியன்கள் பெறுமதியானவை. பொருளாதார சீரழிவுக்கு தேசிய இனப் பிரச்சனையும், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் யுத்தத்தை மேற்கொண்டதும் தான் காரணம். அது தான் மூல காரணம். அதற்கு தான் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு என்பது இதற்கான நிரந்தர தீர்வு இல்லை.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தால் தான் முதலீடுகளை வெளிநாடுகளோ, தனிநபர்களோ மேற்கொள்வார்கள். இந்த நாட்டில் தெர்டர்ந்தும் வெடுக்குநாறிப் பிரச்சனைகளும், குருந்தூர் மலை பிரச்சனைகளும், புதிது புதிதாக புத்த கோவில் பிரச்சனைகளும், வடக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் பிரச்சனைகளும் தொடந்தும் நடக்குமாக இருந்தால் இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் இருக்காது.

Also Read : முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியும் மாவீரர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்

ரணில் விக்கரமசிங்க பொருளாதார ரீதியாக நாட்டை மேம்பட்ட நிலைக்கு கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இல்லை. பொருளாதார ரீதியாக இலங்கை பெற்ற கடன்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடன்கள் இன்னும் பல வருடங்களுக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார்கள்.

நாங்கள் இந்த தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் சொல்ல வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. இலங்கையில் இன்னும் தேசிய இனைப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்பதை மீளவும் சொல்ல வேண்டியுள்ளது. அதை எவ்வாறு சொல்ல வேண்டி உள்ளது என்றால் நாங்கள் இந்த தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலமும், அந்த வேட்பாளருக்கு பல லட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவும் அந்த செய்தியை வழங்க முடியும்.

Also Read : தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என்கிறார் வடிவேல் சுரேஷ்

உங்கள் மேல் நாங்கள் நம்பிக்கை இழந்துள்ளோம். நீங்கள் இனப்பிரச்சனை தீர்வை கொள்ளவேயில்லை என்ற செய்தியை சிங்கள தலைவர்களுக்கும், மக்களுக்கும் இதன் மூலம் சொல்ல முடியும். இராஜ தந்திரிகளும் அதனைப் புரிந்து கொள்வர். அதனை ஒருவர் நினைத்தால் மாத்திரம் செய்ய முடியாது.

இந்த போராட்டம் தமிழ் மக்களது இருப்புக்கான போராட்டமாக உள்ளது. நாங்கள் ஐக்கியப்பட்டு தேர்தல் விடயத்தை கையாளுவோமாக இருந்தால் எங்கள் இருப்பை காப்பாற்ற முடியும். நாங்கள் திடகாந்திரமாக செயற்படுவோமாக இருந்தால் சிங்கள தரப்பை சிந்திக்க வைக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

 

VIDEOS

RELATED NEWS

Recommended