• முகப்பு
  • இந்தியா
  • ஜூன் 9ம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்.

ஜூன் 9ம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்.

Bala

UPDATED: Jun 6, 2024, 7:53:53 PM

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது.

தனிபெரும்பான்மையுடன் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி செய்த பாஜக தற்போது, தெலுங்குதேசம் , ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க உள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வானது நாளை மறுநாள் (ஜூன் 8) தேதி நடைபெறும் என முன்னர் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்சமயம் வந்த தகவலின் படி ஜூன் 9ம் தேதி ஞாற்றுக்கிழமை  மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராகும் நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

VIDEOS

Recommended