• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 2 ஆண்டுகளாக சாலை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியும் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த் துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.

2 ஆண்டுகளாக சாலை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியும் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த் துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.

செ.சீனிவாசன் 

UPDATED: Jun 14, 2024, 10:06:00 AM

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா ஒக்கூர் ஊராட்சி தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தெற்கு தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான தார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மழைக்காலங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் ஒக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தெற்கு தெருவிற்கு சாலை அமைப்பதற்கான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்

இந்த நிலையில் இன்று தார் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் சாலை ஓரத்தில் உள்ள இரண்டு குடும்பத்தினர் இடம் தங்களுக்கு சொந்தமானது என எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஆண்டாண்டுகளாக இருந்த சாலையை சீரமைக்கும் பணியை தடுக்கும் இரண்டு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: கலையரசன் கொக்கு தெற்கு தெரு

 

VIDEOS

Recommended