சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ராஜா

UPDATED: May 25, 2024, 10:13:57 AM

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது

இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள்  குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்து சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை உள்ளிட்ட வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது காட்டு நீரோடைகள் சுருளி அருவியில் கலந்து வெள்ளமாக கொட்டுகிறது. 

இதனால்  சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர் வனத்துறையினர்.

கனமழை பெய்து வருவதால்  அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும்  வர வேண்டாம் என திருவலிபுத்தூர் மேகமலை வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended