• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் மாநகராட்சி பூங்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால் - பாஜகவினர் மற்றும் விசுவ இந்து பர்ஷித்  விநாயகர் சதுர்த்தி நடத்துவோம்.

திருச்சியில் மாநகராட்சி பூங்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால் - பாஜகவினர் மற்றும் விசுவ இந்து பர்ஷித்  விநாயகர் சதுர்த்தி நடத்துவோம்.

JK

UPDATED: Jun 16, 2024, 12:42:53 PM

திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர், 40வதுவார்டுக்கு உட்பட்ட பகுதி இந்திராநகர். இந்த பகுதியில் வீட்டுமனைகள் பிரித்த பின்னர் ஒரு பகுதி பூங்காவிற்காக பொது இடமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மசூதி கட்டுவதற்கு முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக உட்பட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் அந்த பூங்காவில் நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்தி கொள்ள திருச்சி ஆர்டிஓ அருள் அனுமதி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாகஅப்பகுதியில் உள்ள பாஜக மற்றும் விசுவ இந்து பரிசத் உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் யாரும் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விஸ்வ இந்து பரிஷித் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பா.ஜ.கமாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் பூங்காவை பார்வை இட்டதோடு இந்த இடம் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்படி அவர்களுக்கு  அனுமதி கொடுத்தால் நாங்கள் பாஜக வெற்றி விழாவும், விநாயகரை வைத்து வழிபடுவோம் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் 18ஆம் தேதி இதே இடத்தை சுத்தம் செய்து மசூதி கட்ட முயற்சி செய்ததாவும், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடத்திலிருந்து யாரும் நுழையக் கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் தற்போது பக்ரீத் தொழுகை பிரச்சனை அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பக்ரீத் பண்டிகையை அன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended