ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் ஊராட்சியில் அத்துமீறும் மாவட்ட நிர்வாகம்.

சண்முகம்

UPDATED: Apr 29, 2024, 6:45:17 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆதிவராகநல்லூர் ஊராட்சிக்கு கொண்டுவரப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும்,

பேரூராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கும், மற்றும் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் எடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல்படி மண் பரிசோதனை செய்வதற்கான வாகனம் வந்தது.

இந்நிலையில் இதனை அறிந்து கேள்வியுற்ற ஆதிவராகநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பரமானந்தம் மற்றும் கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்தனர்.

அப்போது மண் பரிசோதனை ஆய்வு செய்ய வந்த வாகனத்தில் வந்தவர்களிடம் எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் இங்கு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கும், குப்பைகளை கொட்டுவதற்கும் மற்றும் புதிய போர்வெல் அமைப்பதற்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம், ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் அதன்படி முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள் இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும். எங்கள் ஊராட்சியில் எவ்விதமான அனுமதியும் பெறாமல் எப்படி நீங்கள் வந்தீர்கள்? என்று கேள்வி கேட்டு வந்த வாகனத்தை உடனடியாக திருப்பி அனுப்பினர்.

மேலும் தங்கள் ஊராட்சியில் எங்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என ஏற்கனவே வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்துள்ளதாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் தெரிவித்தார்.

ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் இந்த ஊராட்சியை அழித்திடும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்த முயல்கிறது.

இதனை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அடுத்த கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் எனவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

எங்கள் பகுதியில் தற்போது காலியாக உள்ள இந்த இடத்தில் குடியிருப்புகள் இல்லாமல் உள்ளவர்களுக்கு மனைபட்டா வழங்கினால் சரியாக இருக்கும்.

மற்றபடி வேறு எந்தத் திட்டங்களையும் இங்கு நிறைவேற்றக்கூடாது என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பேட்டி -1

இளவரசன்

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் 

ஆதிவராகநல்லூர் 

பேட்டி -2

பரமானந்தம் 

அதிமுக 

ஒன்றிய கவுன்சிலர் 

ஆதிவராகநல்லூர் 

பேட்டி -3

கிராம பொதுமக்கள் 

ஆதிவராக நல்லூர்.

 

  • 1

VIDEOS

Recommended