பாத்திரங்களுடன் வந்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை.

ரமேஷ்

UPDATED: Sep 9, 2024, 10:38:04 AM

கும்பகோணம் மாவட்டம்

கும்பகோணத்தில் கோவிலுக்கு சொந்தமான 44 குளங்கள் மற்றும் 11 வாய்க்கால்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் 12 வாரத்திற்குள் அகற்றப்பட்டது என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். 

ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு

அதன்படி கும்பகோணத்தில் உள்ள வண்ணாங்கன்னி எள்ளுகுட்டை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் 39 குடும்பத்தினரை ஓலைக்குட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்பில் வசிப்பதாகவும், வரும் 19ம் தேதிக்குள் இடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

வரும் 15 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Breaking News in Tamil

தொடர்ந்து தங்களிடம் அரசின் அனைத்து ஆவணங்களும் எள்ளு குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்றுதான் வழங்கப்பட்டுள்ளது. 

நீர்நிலை புறம்போக்கில் வசிப்பதாக இருந்தால் எதற்கு எங்களுக்கு இத்தனை ஆவணங்களை கொடுத்தனர் என்ற‌ கேள்வி எழுப்பினார்கள்.

News in Tamil

மேலும் அங்கிருந்து காலி செய்ய முடியாது என கூறி பாத்திரங்களுடன் வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மற்றும் மாநகராட்சி திட்ட இயக்குனர் கண்ணன், பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended