மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 16, 2024, 12:31:02 PM

போதிய கல்வி அறிவ இல்லாததால் பழங்குடி இன மக்களின் சலுகைகள் பல்வேறு சமூகத்தினரால் சுரண்டப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

பழங்குடியின மக்கள் காய்கனிகள், மற்றும் எலி, பூனை, அணில், மீன் போன்றவற்றை வேட்டையாடியும் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டும் , கிடைக்கும் இடத்தில் தங்கி கொண்டும்அவர்களது வாழ்க்கையோட்டத்தை நடத்தி வருகிறார்கள். 

இத்தகையை பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தைத் மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வந்தாலும் அந்த இன மக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், போதிய தகவல்கள் கிடைக்காததாலும் இன்னும் அச்சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவு இல்லாமல் வீடுகள் எதுவும் இன்றி ஏரிக்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்கதிபூர் பகுதியில் , ஓரிக்கை , செவிலிமேடு, நத்தப்பேட்டை கன்னிகாபுரம் , சின்ன காஞ்சிபுரம், திருப்புட்குழி, சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் ஏரிக்கரையோரம் வசித்து வாழும் 31 இருளர் பழங்குடி மக்களுக்கு, 2022 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.

பட்டா வழங்கி இரண்டு வருடம் கடந்தும், இருளர் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை இதுநாள் வரையில் மாவட்ட நிர்வாகம் காண்பிக்கவில்லை. 

இருளர் சமுதாய மக்கள் வீடு கட்டுவதற்கு கீழ்கதிர்பூர் அடுத்த குண்டு குளத்தில் தலா ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் அரசாங்கத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. 

பழங்குடி மக்களுக்கு எந்த இடம் தன்னுடைய இடம் என இது நாள் வரையில் (கடந்த இரண்டு வருடமாக) மாவட்ட நிர்வாகம் காண்பிக்காததால் தங்களுக்கு பாத்தியப்பட்ட இடம் எது என தெரியாததால் வந்த நிதியை கூட பயன்படுத்தவோ வீடு கட்டவோ, இயலவில்லை என புலம்புகின்றார்கள்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏரிகரைகளில் குடிசை போட்டு வாழ்கின்ற நாங்கள் மழையாலும் காற்றினாலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றோம். உடல்நலம் கெட்டுப் போய் எங்கள் சமூக மக்களே பலர் இறந்து போகின்றார்கள்.

எங்களுக்கு பட்டா கொடுத்த மாவட்ட நிர்வாகம் ஏன் அந்த இடத்தை காண்பிக்க மறுக்கின்றது. எங்களுக்கு இடம் இருக்கா இல்லையா என மாத்தி மாத்தி நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டு வருகின்றோம்.

மாவட்ட நிர்வாகம் மிக அலட்சியமாக எங்களை கையாளுகின்றது என இருளர் பழங்குடி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  

எனவே பட்டா கொடுத்த தமிழக அரசு எங்களுக்கு உண்டான இடத்தை மழை காலத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் மன்றத்தின் ஆதரவுடன் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆதி திராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் சத்தியா ஆகியோர்களை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்றனர்.

வீடின்றி பட்டா மட்டும் வைத்துக் கண்டு தவிக்கின்ற பழங்குடி மக்களுக்கு, ஆதரவு தெரிவித்து, முறையாக காவல்துறையினரிடம் அனுமதி வாங்கியும், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என பழங்குடி மக்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் ஜெசி ஆகியோர் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு பட்டா கொடுத்த மாவட்ட நிர்வாகம் , இரண்டு வருடம் கடந்தும் இது நாள் வரையில் அவர்களுக்கு உண்டான இடத்தை அளந்து கல்நட்டு தராமல் உள்ளதால் , மாவட்ட நிர்வாகம் மிகவும் அலட்சியமாக உள்ளனர். 

செயல்படாமல் உள்ள மாவட்ட அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் கேட்டுக்கொண்டனர். 

பேட்டி. மகேஷ் மக்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர்.

 

VIDEOS

Recommended