கூர்மையான ஆணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.

L.குமார்

UPDATED: Jun 16, 2024, 12:14:25 PM

கும்மிடிப்பூண்டியில் உள்ள மிகவும் கூர்மையான ஆணிப் பலகையின் மேல் நின்று 50 மாணவர்கள் 50 யோகா செய்து புதிய உலக சாதனை படைத்தனர். 

இவர்களது சாதனையை நோவா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாரம்பரிய கலைகளில் தேர்ந்த பலரால் மீண்டும் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிற்கப்பட்டு புத்துயிர் பெற்று வருகிறது.

இதனால் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல பள்ளி கல்லூரி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பலவித பாரம்பரிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். 

இதனை மீண்டும் வெளிப்படுத்தும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வினா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் காளத்தீஸ்வரன் ஏற்பாட்டில் கூர்மையான ஆணிப்பலகையின் மீது அமர்ந்து உடலை வில்லாக வளைத்து மிகவும் கடினமான 50 யோகாக்களை 50 மாணவர்கள் ஒரே நேரத்தில் செய்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இவர்களது சாதனையை நோவா உலக சாதனை அங்கீகரிப்பாளர்கள் ஐந்து பேர் ஆய்வு செய்து இவர்களது சாதனையை உறுதி செய்தனர்.

 

VIDEOS

Recommended