வர்த்தக நிலையம் உடைப்பு ஒருவர் கைது
ஏ.எஸ்.எம்.ஜாவித்- கொழும்பு
UPDATED: Nov 8, 2024, 10:44:35 AM
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாபரே மாவத்தை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை மிரட்டி 7 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார். நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதுஇ சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகள் மூவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை நாளாந்தம் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் மட்டுமல்லாது பொது மக்களும் அவதானமாக இருந்து ஒத்துழைப்புக்களை வழங்கும்போது ஓரளவு அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆதிகமாக போதைவஸ்துப் பாவனையாளர்களின் கைவரிசையே அதிகம் இடம்பெற்று வருகின்றன.