கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேர்.
ரமேஷ்
UPDATED: Apr 22, 2024, 1:37:48 PM
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.
இந்த பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும், நடத்துனராக செந்தில்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு பேருந்து பழைய பாலக்கரை அருகே வந்த போது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பல், அந்தப் பேருந்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்து எடுக்க வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தாக்கினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அருகில் உள்ளவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அவ்வழியாக வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை 10 பேர் சேர்ந்த கும்பல் அடித்துக் கொண்டிருந்த போது அதை படம் எடுத்த போது செய்தியாளர்களையும் தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த செய்தியாளர்கள் வெளிநோயாளியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் வருகின்றனர்.
ALSO READ | மின் தடையால் விவசாயிகள் அவதி.
இது குறித்து தகவலயறிந்த கிழக்கு காவல்துறையினர், காமராஜ் நகரைச் சேர்ந்த சரவணன், மகன் சுதர்சன் (24), சரவணன் மகன் உதயகுமார் (25), பாலாஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் குமரன் மகன் ஜனார்த்தனன் (20), பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.