• முகப்பு
  • விளையாட்டு
  • வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் 2024 நடைபவணியும் ரதபவணியும் வெகுவிமர்சையாக இடம்பெற்றது

வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் 2024 நடைபவணியும் ரதபவணியும் வெகுவிமர்சையாக இடம்பெற்றது

TGI

UPDATED:

வரக்காப்பொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் அமுத விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஹசனியன் வோக் 2024 நடைபவணியையும். ரத பவணியையும் கல்லூரி அதிபர். ஜே.எம்.ராபீல் கல்லூரி வளவிலிருந்து ஆரம்பித்து வைத்தார்.

original/img_20240724_185538
1944ம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட பாபுல் ஹசன் மத்திய கல்லூரி 2024ம் ஆண்டு 80 ஆண்டுகளை பூர்த்தி செய்து அமுத விழாவை கொண்டாடுகின்றது.

இதனை முன்னிட்டு  கல்லூரி வளவிலிருந்து ஆரம்பமான பவணி அங்குருவெல்ல வீதியின் ஊடாக சென்று தர்மசிறி சேனாநாயக்க சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து கொழும்பு கண்டி பிரதான வீதி ஊடாக சென்று அங்குருவெல்ல சந்தியை அடைந்து அங்கிருந்து கணித்தபுற வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய மாணவர்களும் மாணவிகளும் கலந்துக்கொண்டனர்.

பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நடைபவணி கல்லூரி வரலாற்றில் இடம்பெற்ற மாபெறும் நடைபவணியாகும்.

பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள்ரூபவ் முன்னாள் அதிபர்கள் என ஏராளமானோர் இதில் கலந்துக்கொண்டனர்.

இதே நேரம் கல்லூரியின் அமுத விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெறும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 20, 21ம் திகதிகளில் பகலிரவுப் போட்டியாக நடைப்பெற்றது.

 இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் கே.எல்.ராபில் தலைமையில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

 வரக்காபொல பிரதேச சபையின் முன்னாள்எதிர்க்கட்சி தலைவரும் சப்ரகமுவ மாகாண ஆளுநருமான சட்டத்தரணி நவீன் திஸாநாயக்கவின் இணைப்பாளருமான எம்.பி.எம்.ஷரிப் ஓய்வுப்பெற்ற அதிபர்களான எம்.எம்.எம்.அமீர்,எம்.ஜே.எம். காஷிம்,திருமதி.எம்.ஐ நஷீரா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 கல்லூரியின் 33 பழைய மாணவர் அணிகள் கலந்துக்கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 4 அணிகள் சம்பியன் அணிகளாக மகுடம் சூடின. இரண்டு நாட்கள் பகலிரவுப்போட்டியாக நடைப் பெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



 

 

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended