• முகப்பு
  • வானிலை
  • வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள இன்றைய காலநிலை தொடர்பான தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள இன்றைய காலநிலை தொடர்பான தகவல்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 1, 2024, 1:22:33 AM

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பிற் பகல் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில்  அதிகபட்சம் 50 மில்லி மீற்றருக்கும் மேல் பதிவாகலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Also Read :செய்திகளை உண்மைத் தன்மையுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி கிரேட் இந்தியா நியூஸ் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Also Read : இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் "உறுயம" வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read :வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  பொது மக்களை வானிலை அவதான நிலையம்  கேட்டுக் கொள்கின்றது.

VIDEOS

Recommended