• முகப்பு
  • இலங்கை
  • வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா

UPDATED: Mar 12, 2024, 12:17:20 PM

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர்.

Also Read : ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ உச்சி மாநாடு

அவர்கள் மறுநாள் சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது பொலிசாரின் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது அங்குள்ள தொல்பொருள் சின்னங்கள்சேதப்படுத்தப்பட்டுள்ளதாகதொல்பொருட்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Also Read : அரசு பள்ளிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

ஆலயம் சார்பாக ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் என். ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.திருஅருள், உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

VIDEOS

RELATED NEWS

Recommended