• முகப்பு
  • வானிலை
  • Breaking - இந்தியப் பெருங்கடலில் அடுத்தடுத்து 3 நில நடுக்கங்கள்

Breaking - இந்தியப் பெருங்கடலில் அடுத்தடுத்து 3 நில நடுக்கங்கள்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Dec 29, 2023, 5:55:23 AM

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகளின் எண்ணிக்கை 4 ஆகும்.

இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 அலகுகளாகப் பதிவானதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார்.

முன்னதாக, ரிக்டர் அளவு கோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நில நடுக்கங்கள் பதிவாகியிருந்ததாகவும், இதனால் "இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை" எனவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கங்கள், இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.

கடலுக்கு அடியில் உள்ள மலைத் தொடரில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VIDEOS

Recommended