• முகப்பு
  • இலங்கை
  • ஹட்டனில் இன்று பல கோரிக்கைகளை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது

ஹட்டனில் இன்று பல கோரிக்கைகளை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது

கௌசல்யா

UPDATED: Jul 28, 2024, 1:45:50 PM

இந்த போராட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1700 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

original/img-20240728-wa0209(1)
தமிழ் முற்கோக்கு கூட்டணி இப்போராட்டத்தை ஏற்பாடு செய்தது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1700 ரூபாயாக உயர்த்த, பெருந்தோட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில், தமிழ் முற்கோக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை, வீட்டு உரிமை, வேலைவாய்ப்புக்கள் என்பனவும் வலியுறுத்தப்பட்டது.

தோட்ட தொழிலாளர்கள் சம்பளத்திற்கு குறித்த வர்த்தமானி அறிவிப்பு மீட்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், ஹட்டனில் சில கடைகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஹட்டன் நகர புட்சிட்டி பகுதியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து, ஹட்டன் பிரதான நகர வழியாக பேரணி மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.

இந்த போராட்டத்தின் போது கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும், ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பெரும் அளவில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தால் ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended