• முகப்பு
  • இலங்கை
  • நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக சர்வமத தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக சர்வமத தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 7, 2024, 3:36:29 PM

 நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்று (07/06/2024) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

original/img-20240607-wa0085
இவர்களுக்கான நியமனக்கடித்தை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ வலங்கிவைத்தார்.

நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வழுப்படுத்தல். சகல இனங்களுக்கிடையில் சமாதானத்தினையும் சகவாழ்வினையும் சுட்டியெழுப்புதல் ஆகியவற்றினை நோக்கி அனைத்து இனங்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இவ்வமைச்சிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல் இப்பதவியின் பிரதான இலக்கு மற்றும் செயற்பணிகளாகும் என்றும் நியமனக்கடித்தத்தில் 

குறிப்பிடப்பட்டுள்ளது.

original/img-20240607-wa0088
சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இன ஒற்றுமைக்காக பல்வேறு செயல்பாடுகளை 20வது வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றவர்களாவார்கள்.

original/img-20240607-wa0082

 original/img-20240607-wa0087
இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தங்களுடைய அனுபவரீதியான செயல்பாடுகளை கடந்த காலங்களில் நிரூபித்துக் காட்டியவர்களாவார்கள்.


சர்வ மத கூட்டமைப்பின் முக்கியஸ்தவர்களாகவும் சிறந்த இன ஒற்றுமைக்கான முன்மாதிரி மிக்கவர்களாகவும் இந்த சர்வமத தலைவர்கள் செயற்பட்டு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


 ( Ministry of Justice Appoints Inter Religious Leaders as Coordinators for National Unity and Reconciliation Affairs 

Minister of Justice, Prison Affairs and Constitutional Reforms Wijeyadasa Rajapaksa has appointed Ven. Dr. Sasthrapathi Galagama Dammaransi Nayake Thero, Rev. Dr. Sivashri Babu Sharma Kurukkal, Al-Haj Ash Seyed Al-Hafil Dr. Hassan Moulana Al-Quadiri and Rev. Dr. Father Nishan Cooray Coordinators for National Unity and  Recilation Affairs. 

Today (07/06/2024) Letters of appointment were handed over by Justice, Prison Affairs and Constitutional Reforms Minister Wijayadasa Rajapaksa)

VIDEOS

Recommended