கடனுக்கு மேல் கடன் எதனால் ஏற்படுகிறது தெரியுமா ?

TGI

UPDATED: Mar 31, 2024, 4:01:18 PM

பொதுவாக வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பதுதான்.

அதிலும் தொழில் முனைவோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களுடைய தொழிலில் சிறிது வளர்ச்சி ஏற்பட்டாலே போதும் அவர்களுடைய முதல் குறிக்கோள் கடன் வாங்கியாவது சொந்தமாக அழகிய வீடு கட்ட வேண்டும் என்பதாகிவிடும். அப்படி கட்டப்படும் வீடு அவர்களது ஆசைக்கான வீடாகவும் அமைந்துவிடுகிறது.

அப்படி கட்டப்படும் வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுவதில்லை. அந்த வீடும் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்பிறகு வாஸ்து தவறுகளினால் அதனுடைய பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும்.

ஏற்கனவே தொழில் நடத்த வாங்கிய கடனும்இ தற்சமயம் வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனும் சேர்ந்து கட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி கொண்டிருப்பார்கள்.

இது போன்ற நிலை ஏற்பட அந்த வீட்டில் வாஸ்து அமைப்புகள் கீழ்கண்டவாறு தவறாக இருக்க வாய்ப்புள்ளது.

வீட்டின் வடக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது

வடகிழக்கு உச்சத்தில் ஜன்னல் அமைப்பு இல்லாமல் இருப்பது

கிழக்கு நடுப்பகுதியில் கழிவறை

தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலை படிக்கட்டுஇ அதன் அடியில் கழிவறை இருப்பது

தென்மேற்கில் கழிவறை அமைப்புடன் இருத்தல்

போன்ற அமைப்புகள் அந்த வீட்டில் நிச்சயம் அமைய பெற்றிருக்கும்.

இதுபோன்ற தவறுகள் ஏதேனும் உங்கள் வீட்டில் இருப்பின் ஒரு நல்ல வாஸ்து நிபுணரை தொடர்பு கொண்டு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் உங்கள் வீட்டை சரி செய்யும் பட்சத்தில் கடன் என்ற சிரமத்திலிருந்து நிச்சயம் விடுபட முடியும்.

  • 19

VIDEOS

Recommended