அடிக்கடி வேலை மாற்றம் வேலை இழப்பிற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா ?

TGI

UPDATED: Mar 31, 2024, 3:46:20 PM

இன்றைய சூழ்நிலையில் வேலையை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்பதுதான் பலரது மனநிலையாகும். அந்த அளவு இக்கட்டான சூழ்நிலையை தற்சமயம் எதிர் கொண்டிருக்கிறோம்.

ஒரு சிலருக்கு நல்ல திறமை இருக்கும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உடனே முடிக்கும் திறமை அற்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்களால் ஒரு வருடமோ அல்லது ஒரு சில மாதங்களுக்குள் அந்த வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

இதற்கான காரணம் கீழ்கண்டவையாக இருக்கலாம் :

வேலையின் அழுத்தம்.

மேல் அதிகாரிகளின் தவறான போக்கிற்கு உடன்படாமை.

உடன் வேலை செய்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டை.

இப்படி அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டிருப்பவர்களின் வீட்டை கூர்ந்து நோக்கினால் அவர்கள் வீட்டில் நிச்சயம் வாஸ்து தவறுகள் இருக்கவே செய்யும்.

ஒரு வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்ற நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு மூடப்பட்ட அமைப்பு.

வடகிழக்கு பூஜையறை அமைப்பு.

வீட்டின் தென்மேற்கில் ஏற்படும் வாஸ்து தவறுகள்.

போன்றவை ஒருவரின் வேலை அடிக்கடி மாற்றம் ஏற்படவோ அல்லது வேலை இழப்பு ஏற்படவோ வாய்ப்புள்ளது.

மேற்கண்ட திருத்தங்களை வாஸ்து நிபுணர் துணை கொண்டு சரி செய்யும்போது ஒரு நல்ல நிரந்தர நிம்மதியை கொடுக்கும் வேலையை பெறலாம் சிறப்புடன் வாழலாம்.

  • 20

VIDEOS

Recommended