ஹரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என கூறும் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் ஏன் கூறவில்லை?
தருண்சுரேஷ்
UPDATED: Oct 9, 2024, 6:51:33 PM
திருவாரூர்
திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசியதாவது
ஹரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என கூறும் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் ஏன் கூறவில்லை? என கேட்டார்
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டால் அடுத்த கணமே கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கும் என கூறினார்
சிதம்பரம் கோவில் கருவறையில் விளையாடவில்லை கோவில் வளாகத்தில் தான் விளையாண்டார்கள் அதில் ஒன்றும் தவறில்லை என தீட்சிதர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்
தொடர்ந்து மாத்தி மாத்தி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நீங்க என்ன பத்திரிக்கை நீங்க என்ன பத்திரிக்கை என கோபம் அடைந்தார்
தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு சரியான முறையில் தான் ஒதுக்குகிறது பாரபட்சம் காட்டுவதில்லை என பேசினார்
கூட்டணியில் மாற்றம் வரும் என திண்டுக்கல் சீனிவாசன் பேசிய குறித்து கேட்டதற்கு திண்டுக்கல் சீனிவாசன் என்னுடைய நண்பர்,
அதிமுக சீனியர் தலைவர்கள் எல்லாம் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள் என தகவல்கள் வருகிறது அதனுடைய தொடர்ச்சியாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கலாம் என கூறினார்
பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி தற்போது உள்ள விலைவாசி உயர்வால் வீடு கட்ட முடியாமல் இருக்கிறது அதற்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குமா என கேட்டதற்கு ஒரு மனு கொடுங்கள் என கூறி சென்றார்.