வன்முறை சம்பவங்களில் ஆளுங்கட்சிணர் ஈடுபடுவதால் தேர்தல் நாள் அன்று மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் - பாரிவேந்தர்
மாரியப்பன்
UPDATED: Apr 14, 2024, 8:10:02 AM
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தில் நேற்று தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோரிடம் திமுகவை சேர்ந்த கேரளா மணி என்பவரது மகன் ராஜா உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கல் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து காயமடைந்த இருவரும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் இன்று நேரில் பார்த்து ஆறுதல் கூறிய இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய ஜனநாயக கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழ்நிலை இருப்பதை அறிந்து தோல்வி பயத்தால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதுபோன்று வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும்
தேர்தல் பரப்புரையின் போதே இதுபோன்று வன்முறை சம்பவங்களில் ஆளுங்கட்சிணர் ஈடுபடுவதால் தேர்தல் நாள் அன்று மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவும் அதனால் தேர்தல் நாள் என்று கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் இந்தத் தாக்குதல் சம்பத்திற்கு காவல்துறையும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார்.