இன்று உலக வானொலி தினம்! ஒரு பார்வை

சுகுணதாஸ் சசிகுமார்

UPDATED: Feb 13, 2024, 6:24:56 PM

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் முதன் முதலில் 2011 இல் வானொலி தினம் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதற்குத் தங்களின் ஒப்புதல் முத்திரையைக் கொடுத்து, சர்வதேச தினமாக அங்கீகரித்தது.
 
வானொலியானது மனிதகுலத்தை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் கொண்டாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகம் மற்றும் ஜனநாயக சொற்பொழிவுக்கான ஒரு தளமாக அமைகிறது.
 
உலக அளவில், வானொலி மிகவும் பரவலாக நுகரப்படும் ஊடகமாக உள்ளது.
 
பல்வேறு சர்வதேச அறிக்கைகளின்படி, உலகில் மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக வானொலி திகழ்கிறது.
 
வாழ்வியலோடு ஒன்று பட்ட பல அம்சங்களின் கண்ணாடியாய் வானொலி சேவைகள் திகழ்கின்றன.
 
 

VIDEOS

RELATED NEWS

Recommended