• முகப்பு
  • other
  • வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு இனி கெத்துகாலம், யாருடைய மெசேஜ்களையும் டெலிட்செய்யலாம், புதிய அப்டேட் வர உள்ளது.

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு இனி கெத்துகாலம், யாருடைய மெசேஜ்களையும் டெலிட்செய்யலாம், புதிய அப்டேட் வர உள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

Meta நிறுவனத்தாரால் நிர்வகிக்கப் படும் வாட்ஸ்அப்பில் புதியவசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டு வருகிறது. குரூப்களில் மேற் கொள்ளப் படும் சாட்கள்மீது கட்டுப்பாடுகளை மேற் கொள்ள அட்மின்களுக்கு அதிகாரம்வழங்குவதாக இது அமையுமென்று தெரிவிக்கப் படுகிறது. புதிய வாட்ஸ்அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்தவசதிகள் இடம் பெற உள்ளன. வாட்ஸ் அப் தளத்தில் மேற் கொள்ளப்படும் எந்தவொருமாற்றங்கள் குறித்தும் 'WABetaInfo' என்னும்நிறுவனம் முன் கூட்டியே தகவல்களை வெளியிட்டுவருகிறது. அந்தநிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, வாட்ஸ்அப் குரூப்களில் உறுப்பினர்கள் அனுப்பிய மெசேஜ்களை அட்மின்கள் டெலிட்செய்ய இயலும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. This Was removed by an admin ( இந்த மெசேஜ் அட்மின் ஒருவரால் அழிக்கப்பட்டது ) என்ற வாசகம் அந்தமெசேஜை அனுப்பிய யூஸருக்கு காண்பிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் எந்த வொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட பதிவை Delete for Everyone என தேர்வுசெய்து கொள்வதற்கான நேரவரம்பை இரண்டு நாட்கள் 12 மணி நேரத்திற்கு நீட்டிப்புசெய்ய வாட்ஸ்அப் நிறுவனம் திட்ட மிட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்டில் இது இடம் பெறும் என்றாலும், அது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப் படவில்லை என தெரியவருகிறது. செய்தியாளர்: பா. க. ஸ்ரீதேவி.

VIDEOS

RELATED NEWS

Recommended