• முகப்பு
  • குற்றம்
  • போதை பொருட்களுகளுக்கு எதிராக போர் தொடுத்து வருகிறோம்: ஏடிஜிபி சங்கர்!

போதை பொருட்களுகளுக்கு எதிராக போர் தொடுத்து வருகிறோம்: ஏடிஜிபி சங்கர்!

வாசுதேவன்

UPDATED: May 11, 2023, 2:07:50 PM

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக போர் தொடுத்து வருகிறோம். அதிக அளவில் குற்றவாளிகளை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து வருகிறோம். அனைவரும் போதை பொருட்களை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேசினார். 

வேலூர் மாவட்டம்,. காட்பாடியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாகனம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் முத்துசாமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வேலூர் எஸ்.ராஜேஷ் கண்ணன் மற்றும் ராணிப்பேட்டை கிரன் ஸ்ருதி, திருப்பத்தூர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். 

பின்னர் கூட்டத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் பேசுகையில், போதை பொருட்களை கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளை கைது செய்ய முடியும்.

மேலும் நாம் போதை பொருட்களுக்கு எதிரான போரை தொடுத்து வருகிறோம். அதன் தேவையை குறைத்தால் பயன்பாடு முற்றிலும் நின்றுவிடும். ஆயிரக்கணக்கான டன் கஞ்சாக்களை பறிமுதல் செய்து படிப்படியாக கஞ்சாவை ஒழித்து வருகிறோம். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக போதை பொருட்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இக்கூட்டத்தில் கலந்துரையாடலின் போது, கல்லூரி மாணவி ஒருவர் பேசுகையில், அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும்.

சிறிய வயதுடைய மாணவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து போதை பொருட்களையும் அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டுமென பேசினார்.

மாணவியின் இந்த பேச்சு அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் அதிகாரிகளுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended