• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ஆய்வு.

இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ஆய்வு.

முத்தையா

UPDATED: May 6, 2023, 2:18:44 PM

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநல்லூர், பொன்குறிச்சி, முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம், சிங்களாந்தபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இன்று (06.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பொன்குறிச்சி ஊராட்சி கல்லுப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியனையும்,

பிள்ளாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணியினையும்,

முத்துக்காளிப்பட்டி நெசவாளர் காலனியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியனையும்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும், சிங்களாந்தபுரம் ஊராட்சி, எம்.ஜி.ஆர்.காலனியில், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியனையும்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டவர் நகர் முதல் மற்றும் இரண்டாம் குறுக்கு தெருவில் ரூ.7.42 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், சிங்களாந்தபுரம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.30 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணியினையும், சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணியினையும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.04 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணாமர் கோயில் ஏரி முதல் மாரியப்ப பிள்ளை தோட்டம் வரை நீர்வரத்து வாய்க்கலை ஆழப்படுத்தும் பணியினையும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.16 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும், மலையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

ரூ.5.61 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணியினையும், ரூ.10.25 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் கிடங்கு கட்டடம் கட்டும் பணி என பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நியமிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆண்டகளூர்கேட் பகுதியில் ”நம்ம ஊரு சூப்பரு” சுகாதார விழிப்புணர்வு பேரணியை தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், வனிதா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து இருந்தனர் .

VIDEOS

RELATED NEWS

Recommended