ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக நூதனத் திருட்டு.

குமரவேல்

UPDATED: May 31, 2023, 10:28:03 AM

கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகள் சத்யபிரியா ( 34 ) இவருக்கு கடந்த  23.11.2022 தேதி இணையதளம் மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தொடர்பு கொண்டு கூறியதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து இணையதள வழியில் பேசிய நபரின் பேச்சை நம்பிய சத்தியபிரியா முன் பணமாக 29,435.00 ரூபாயை லேசர் பே (Lazor pay) மூலம் அனுப்பியதாக தெரிகிறது.

அதன் பிறகு சத்திய பிரியா பணம் பெற்றுக் கொண்ட நபரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றதாக தெரிகிறது.

ஆனால் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, தாம் ஏமாற்ற பட்டிருப்பதாக உணர்ந்த சத்திய பிரியா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெறிவித்ததாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து மேற்படி நபர் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில்,

காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் மேற்படி லேசர்பே தனி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேற்படி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் தங்களது நிறுவனத்தின் மூலம் ஏமாற்றியது எனவும்,

எனவே பணத்தை பாதிக்கப்பட்ட வங்கி கணக்கில் திரும்ப செலுத்துமாறு அறிவுறுத்தின்பேரில் மேற்படி நபரின் கணக்கிலிருந்து Rs.29435. பணம் திரும்ப அனுப்பி வைத்ததால் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாதிக்கப்பட்ட சத்யபிரியா அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.

மேலும் இதுகுறித்து இதுபோன்ற இணையவழி குற்றங்கள் குறித்து பலமுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டும் மீண்டும் இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகள் இடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆகவே, இனிமேலும் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended