• முகப்பு
  • கல்வி
  • கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம்.

மாமுஜெயக்குமார்

UPDATED: Mar 21, 2023, 1:27:48 PM

 

இந்திய அளவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் சிறந்து விளங்குவதில் தமிழ்நாட்டில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் ஆகும்.

கல்லூரி நிர்வாகம், கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரிய பெருமக்கள் தங்களது கல்லூரியில் பயிலும் மாணவர் - மாணவியர்கள் கல்வி அறிவைச் சார்ந்த பொது கல்வியையும் பயின்று முன்னோடிகளாக வரவேண்டுமென்ற நல் எண்ணத்தில், கல்லூரியில் கருத்தரங்கள் போன்று பொது நிகழ்வுகள் நடத்தி மாணாக்கர்களை உற்சாகப்படுத்தி கல்வியை கற்று தருவது தொடர் கதையாக உள்ளது.

அதனடிப்படையில்,கோவை நவ இந்தியா பகுதியில் செயல் பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை (எம்.பி.ஏ.) சார்பில், ‘வணிகப் பயன்பாட்டு தரவுகளை மீண்டும் கண்டறிதல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 

கருத்தரங்கத்திற்கு,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர், செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் ஜெ.பாமினி அனைவரையும் வரவேற்றார்.

கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் முதன்மை நிதி அலுவலர் ரவி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, கோவை சாஸ் ஸ்டார்ட் அப் தரவு அறிவியல் தலைவர் முனைவர் எம்.செல்வராஜூ, ஜி.கே.என்.எம். மருத்துவமனை தலைமை தகவல் அலுவலர்  பிஜூ வேலாயுதன் ஆகியோர் உரையாற்றினர். 

கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை முனைவர் என்.பிரேமானந்த், முனைவர் என்.அம்சவேணி, முனைவர். பி. மெர்சலின் அனிதா, முனைவர் டி. திவ்யா உள்பட எம்.பி.ஏ. மாணாக்கர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended