• முகப்பு
  • கல்வி
  • கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கும், துறைக்கும் பெருமை தேடி தந்த இயற்பியல் மாணாக்கர்களுக்கு பாராட்டு மழை

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கும், துறைக்கும் பெருமை தேடி தந்த இயற்பியல் மாணாக்கர்களுக்கு பாராட்டு மழை

மாமுஜெயக்குமார்

UPDATED: Mar 3, 2023, 1:13:42 PM

 

கோவை - நவினாசி செல்லும் சாலையில் நவஇந்தியா பகுதியில் இந்திய அளவில் கல்விக்கு புகழ் பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி ஆளுகிறவர் கையிலும், வீட்டின் வளர்ச்சி குடும்ப பெரியவர்கள் கையிலும் என்பது போன்று கல்லூரியின் வளர்ச்சி நிர்வாகம், முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரிய பெருமக்களும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி திறம்பட செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும் தங்களது கல்வியோடு கல்லூரியின் எண்ணத்தை ஈடு செய்யும் விதத்தில் தனித்திறமைகளிலும் தங்களது முழு கவனத்தை செலுத்தி வெற்றி என்ற தாரக மந்திரத்தை பெற்று தருவதே ஒரே நோக்கமாக செயல்படுவதை நாம் கண் கூடாக காண முடியும்.

அதனடிப்படையில்,ஶ்ரீ ராம கிருஷ்ணா கல்லூரியின் இயற்பியல் துறை மாணாக்கர்கள் பிஎஸ்ஜி கல்லூரி நடத்திய " பொளத்திகா-23 " என்ற அனைத்து கல்லூரிக்கான போட்டியில், ஒட்டுமொத்த சூழற்கேடயம் இரண்டாம் இடத்தையும்,

கற்பகம் கல்லூரி நடத்திய " இயற்பியல் 23 " என்ற போட்டியில், ரூ. 5000 /= ரொக்க பரிசையும், 

டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி நடத்திய " அலைவரிசை -23 " என்ற போட்டியில், ரூ. 600/= ரொக்க பரிசையும் வென்று இயற்பியல் துறைக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பெருமை தேடி தந்த துறை மாணாக்கர்களை கல்லூரி முதல்வர் - செயலர், முலைவர் பி.எல். சிவக்குமார், துறைத்தலைவி முனைவர் எஸ். பூங்குழலி உள்பட. பேராசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்தி பாராட்டு மழை பொழிந்த வண்ணமாய் உள்ளனர்.

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended