Author: முகேஷ்
Category: மாவட்டச் செய்தி
கடந்த மாதம் ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், மேலக்கிருஷ்ணன்புதூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம், பொன்னுசுவாமி அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடைபெற்றது.
இந்த முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தது நமது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரான எம் ஆர் காந்தி ஆவார். மேலும் மேலக்கிருஷ்ணன் புதூர் ஊர் நிர்வாக தலைவரான சுகுமார் மற்றுமுள்ள ஊர் நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
இவர்கள் அனைவரையும் பொன்னுசுவாமி அறக்கட்டளையின் நிர்வாகிகளான நாகராஜ், லிங்கவேல்மாறன், செந்தில்குமார், பிரபாகர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணராம் வரவேற்றனர்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகமாகவும், ஆர்வமுடன் கலந்து சிறப்பித்தனர். இந்த முகாம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமின் மூலம் சுமார் 210 நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த முகாம் பற்றி பொன்னுசுவாமி அறக்கட்டளையின் தலைவர் நாகராஜி கூறியதாவது.
இந்த அறக்கட்டளையின் மூலமாக இந்த ஆண்டு 9 ஆவது முறையாக இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
Tags:
#kanyakumarinews, #kanyakumarinewstoday , #kanyakumarinewspapertoday , #eyecamp #kanyakumarinewspaper, #kanyakumarinewschannel , #kanyakumarinewsupdate, #kanyakumarilatestnews, #kanyakumaritamilnews , #kanyakumarinewstodaylive , #kanyakumarilatestnews, #latestnewsinkanyakumari ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்கன்னியாகுமரி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu , #கன்னியாகுமரிசெய்திகள்