• முகப்பு
  • திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சிய??

திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சிய??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பார்வையிட்டு, வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் படித்து முடித்துவிட்டு வேலை  தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு வரும் இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக திருவாரூர் நகர போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமில் பி.எஸ்.ஏ குருப்ஸ், லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட், கிராம உதயம் பவுண்டேசன், இக்விடாஸ் வங்கி, ராக்போர்ட் க்ராப் சயின்ஸ், இனோவேஸ் குருப், முத்துட்பைனான்ஸ், கோட்டாக் மகேந்திரா குரூப், இன்போ நெட், சாலி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 52 தனியார் நிறுவனங்கள் கலந்து  கொண்டனர். இவ் வேலைவாயப்பு முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் 2327 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் தனியார்துறை நிறுவனங்களின் நேர்காணலில் தேர்வான 326 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் தில்லைமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வார்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended