Author: ராஜ்குமார்
Category: குற்றம்
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான கல் குவாரி கள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து தினமும் ஜல்லி, எம்சாண்ட், குண்டு கல் கனரகவாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது. அதில் தமிழக எல்லையில் கனிமவளங்களை ஏற்றி கொண்டு நூற்றுக்கணக் கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம்-கேரளா எல்லையில் கனிமவளத்துறை அலுவலர்கள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சேர்ந்தமரம் பகுதியில் காலை நேரத்தில் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல், ஜல்லிகள் போன்றவை சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்ப டுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கனிம வளங்களை கடத்தும் வாகனங்களை சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:
#thenkasinews , #thenkasinewstodaylive, #thenkasinewstodayinenglish #sandsmuggling #thenkasinewsintamil #thenkasinewstoday #thenkasinewsintamiltoday #thenkasitodaynewsintamil #surandainews #surandaitodaynews