வருடம் தோரும் 400 காட்டு யானைகள் அழிக்கப்படுகின்றன - விலங்கியல் துறை சிரேஷ்ட்ட பேராசிரியர்
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Mar 5, 2024, 6:04:56 AM
வருடம் தோரும் 400 காட்டு யானைகள் அழிகின்றன என்பதை விட அவை அழிக்கப்படுகின்றன என்பதே பொருத்தமாகும் என பேராதனைப் பல்கலைக்கழக விலங்கியல் துறை சிரேஷ்ட்ட பேராசிரியர் கலாநிதி அசோக்க தங்கொல்ல தெரிவித்தார்.
சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு தினத்திற்கு இணையாக கண்டி 'சிட்டி சென்றர்' நிலையத்தில் வன விலங்குகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி ஒன்று இடம் பெற்றது. 'ஹுஸ்ம' (மூச்சு) என்ற அமைப்பு இப் புகைப்படக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. இதில் பிரதம அதிதியாக அவர் கலந்து கொண்டு.உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
Also Read : பெட்டர் டுமாரோ டைட்டில் போஸ்டர் வெளியீடு
வருடம் தோரும் சராசரிலயாக 400 காட்டு யானைகளும் 80 மனித உயிர்களும் யனை- மனிதமோதல் காரணமாகப் பலியாவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. அப்படியென்றால் இன்னும் சில காலங்களில் இலங்கையில் யானைகள் இல்லாது போகும் ஒரு நிலை உருவாகலாம். உலகில் இலங்கை உற்பட 13 நாடுகளில் மட்டுமே காட்டு யானைகள் உள்ளன.
இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் வேகமாக அவை அழிவடைவது பாரிய பிரச்சினையாகும். எனவே அதற்கு பொருத்தமான மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இது விடயமாக புகையிரதத் திணைக்களம் ஊடாக பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
Also Read : தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுகம்
குறிப்பாக சுரங்க வழி அமைத்தல், ஒலி எழுப்புதல் போன்றனவாகும். ஆனால் இப்போது நடைமுறையில் மின்சார வேலிகள் இருந்தாலும் அவை எப்போதும் நிலையாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது என்றார்.
Also Read :கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு.
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கே.பி.ரனவன, பேராசிரியர் சாலியா குலரத்ன, கலாநிதி டப்ளியூ. ஏ.ஜி.எஸ். விஜேசுந்தர, 'ஹுஸ்ம'அமைப்பின் தலைவர் கெலும் மஹேஸ், மத்திய மாகாண விவசாய சுற்றாடல் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சமிந்த அபேரத்ன உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Also Read : QUAD வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை இந்தியாவில் சாணக்கியன்