ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவு.

சாம் பென்னட்

UPDATED: Apr 21, 2024, 7:09:09 PM

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவு கடந்துவிட்ட நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் மட்டும் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66. 05 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 65. 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியானது 3. 17 சதவீதம் குறைந்துள்ளது இதே போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1. 33 வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் வெயிலின் தாக்கம் என்று கூறினாலும் மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

 

  • 3

VIDEOS

Recommended