• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.

S.முருகன்

UPDATED: Aug 28, 2024, 7:37:19 PM

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சிலர் கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு இருந்த ஆக்கிரமப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொடுத்தனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, நகராட்சி ஆகிய மூன்று துறைகள் இணைந்து ஜேசிபி எந்திரங்களுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை வேளையில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் அந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி, வேலைகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் ஒரு சில வீடுகளௌ இடிக்க வந்தபோது பொதுமக்கள் வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டு அதிகாரியிடம் கோரிக்கை வைத்த நிலையில் குன்றத்தூர் தாசில்தார் அதனை கண்டு கொள்ளாமல் ஏற்கனவே அதிக காலம் கொடுத்து விட்டதாகவும் இடித்தாக வேண்டும் என வேகமாக நடந்தபடி தாசில்தார் பேசியதால் பொதுமக்கள் அவரை நின்று பேசும்படி கோரிக்கை வைத்தனர்

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றும் பனி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended