- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு விடிய விடிய போராட்டம்.
தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு விடிய விடிய போராட்டம்.
JK
UPDATED: Oct 23, 2024, 5:42:47 AM
திருச்சி
மாநகராட்சி தூய்மை பணிகளை புதுக்கோட்டை சேர்ந்த வேதா நிறுவனம் கடந்த 18மாதமாக ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறது. இதில் சுமார் 1700 தூய்மை பணியாளர்களும், 300குப்பை வண்டி வாகனம் ஓட்டுனரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரூபாய் நாள் ஒன்றுக்கு 650 கூலியாக நியமித்து உள்ளது. ஆனால் வேதா நிறுவனமோ இவர்களுக்கு ரூபாய் 575 மட்டுமே வழங்கி வருகிறது. இதற்கான போராட்டம் கடந்த 18மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி போனஸ்
இந்நிலையில் தீபாவளிக்கான போனஸ் தொகையை வழங்காது என நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று மாலை 6மணி முதல் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில், நிர்வாகி மாறன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கார்த்திகேயன் உட்பட 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
மேலும் உடனடியாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் நேற்று மாநகராட்சி ஆணையரோ அல்லது திருச்சி மேயரோ எந்தவித பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனை கண்டித்து நேற்று இரவு முதல் விடிய விடிய மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தூய்மை பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.