• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்டெர்லைட் ஆலையின் போராட்ட படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் அதிகாரம் கோரிக்கை.

ஸ்டெர்லைட் ஆலையின் போராட்ட படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் அதிகாரம் கோரிக்கை.

JK

UPDATED: May 22, 2024, 11:42:31 AM

Thoothukudi District News

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆறாண்டுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 13பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வருடம் தோறும் தமிழகம் முழுவதும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாவட்டச் செயலாளர் செழியன் தலைமையில் நடைபெற்றது. 

District News

இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் மேற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் புல்லட் லாரன்ஸ், மற்றும் கட்சியினர் விடுதலை என்ற விக்கி, ரகுநாத் மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் ராஜா, ஜீவா, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் நிர்வாகிகள் கோவன், லதா, சமூக அமைப்பின் சார்பில் சம்சுதீன் விவசாய சங்கத்தின்

நிர்வாகி சின்னத்துரை மற்றும் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். 

Today District News

நிகழ்வில் ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு போராடிய மக்களின் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும், உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் வேண்டும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 

  • 1

VIDEOS

Recommended