பூந்தமல்லியில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 15 ஆழ்குழாய் கிணறுகளுக்கு சீல் வைப்பு.

S.முருகன்

UPDATED: Jun 12, 2024, 11:58:49 AM

பூந்தமல்லி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மோட்டார்கள் மூலம் லாரிகளில் தண்ணீர் எடுத்து சென்று விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் உரிய அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்த 15 ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் முற்றிலும் அகற்றப்பட்டு அகற்றப்பட்டது.

விதிமுறைகளை மீறி மேலும் செயல்பட்டால் அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் இந்த பகுதிகளில் விதிமுறை மீறி செயல்படும் ஆழ்குழாய் கிணறுகளை வருவாய்த்துறையினர் அகற்றுவதும் சில வாரங்கள் கழித்து மீண்டும் சட்ட விரோதமாக அவர்கள் தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதும் தொடர்கதையாக இருந்து வருவதாகவும் இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS

Recommended