தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக திருவள்ளூரில் கோமாரி நோய் தடுப்பு ஊசி துவக்கம்

சுரேஷ்பாபு

UPDATED: Jun 10, 2024, 11:20:44 AM

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக கோமாரி நோய் தடுப்பு ஊசி ஐந்தாவது சுற்று முகம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது,

இதில் நுங்கம்பாக்கம் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்துபட்டது,

அதேபோன்று சிறந்த முறையில் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார் ,

கால்நடைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதற்கு நோய் அறிகுறி வந்தால் அதை எவ்வாறு கையாள வேண்டுமென கால்நடை துறையினர் விளக்கமாக கிராம மக்களுக்கு தெரிவித்தனர்,

அவனைத் தொடர்ந்து மருந்து பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான பொருட்களை மருத்துவர்கள் வழங்கினார்,

நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் B. பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம மக்கள் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் காக்களூர் ஆவின் தொழிற்சாலை பொது மேலாளர் ராஜேஷ்.உதவி பொது மேலாளர் பானுமதி. மற்றும் கால்நடை மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன் உதவி இனை இயக்குனர் பாஸ்கர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended